ஃபிர்ணி



தேவையானவை
  •  பால் - 1 லிட்டர்,
  •  பாஸ்மதி அரிசி - அரை கப்,
  •  சர்க்கரை - 1 கப்,
  •  இனிப்பில்லாத கோவா - கால் கப்,
  •  தோல் நீக்கி, சீவிய பாதாம் - 1 டேபிள் ஸ்பூன்,
  •  சீவிய பிஸ்தா - 1 டேபிள் ஸ்பூன்,
  •  ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
  •  குங்குமப்பூ - 1 சிட்டிகை


செய்முறை :

Step 1.
முதலில் பாலைக் காய்ச்சுங்கள். பாஸ்மதி அரிசியை ரவை போல் உடைத்து, காயும் பாலில் சேருங்கள்.

Step 2.
அத்துடன் ஒரு கப் தண்ணீரையும் சேருங்கள். மிதமான தீயில் நன்கு வேகவிடுங்கள். அரிசி ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையைச் சேருங்கள். இரண்டும் சேர்ந்து நன்கு கொதிக்கும்போது, பாதாம், பிஸ்தா, ஏலக்காய்த் தூள், சூடான பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து, கலந்து இறக்குங்கள். குளிரவைத்துப் பரிமாறுங்கள்.

No comments:

Post a Comment

Adbox