மனோகரம்


தேவையானவை
  •  பாசிப்பருப்பு – ஒரு கப்,
  •  பச்சரிசி – 2 கப்,
  •  உப்பு – அரை டீஸ்பூன்,
  •  தேங்காய் – அரை கப்,
  •  பொடித்த வெல்லம் – ஒரு கப்,
  •  ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
  •  எண்ணெய் – தேவையான அளவு,
  •  நெய் – 2 டீஸ்பூன்,


செய்முறை 

Step 1.
முதலில் அரிசி, பருப்பை நைஸாக அரைத்து, உப்பு, தண்ணீர், நெய் சேர்த்து நன்றாகப் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேன்குழல் அச்சில் மாவைப் போட்டு பிழிந்து வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தை உருட்டும் பதத்தில் காய்ச்சவும்.

Step 2.
நொறுக்கி வைத்துள்ள தேன்குழலில் ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பால் சேர்த்து, பாகை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். பாகு நன்றாக கலந்தவுடன் உருண்டையாகப் பிடிக்கலாம். இளம் சூடாக இருக்கும் போது தனித்தனியாக உதிர்த்தும் வைத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Adbox