தேவையானவை
- அரிசி மாவு – 1 கப்
- கடலை மாவு – அரை கப்
- மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
- காய்ச்சிய சூடான எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
- வெண்ணெய் – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
- எள் – 2 சிட்டிகை
- எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு
செய்முறை :
Step 1.
முதலில் அகலமான பாத்திரத்தில், அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், எள் சேர்த்து நன்கு கலக்கவும்.
Step 2.
இதில் காய்ச்சிய சூடான எண்ணெய் சேர்த்துக் கிளறவும். தேவையான தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாகப் பிசையவும். இதை 3 கண்கள் உள்ள தேன்குழல் அச்சில் விட்டு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி முறுக்காகப் பிழியவும்.
Step 3.
மாவு இருபுறமும் வெந்தவுடன், எண்ணெயில் இருந்து எடுத்துப் பரிமாறவும். இதை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.


No comments:
Post a Comment