சர்க்கரை அதிரசம்


 தேவையானவை
  •  பச்சரிசி _ ஒரு அளவு
  •  சர்க்கரை _ பாதி அளவு
  •  உப்பு _ சுவைக்கு
  •  ஏலக்காய் _ ஒன்றிரண்டு


செய்முறை :

Step 1.
முதலில் பச்சரிசியை நன்றாகக் கழுவிவிட்டு, தேவையான தண்ணீர் ஊற்றி ஊறவிடவும். ஊறிய பிறகு தண்ணீர் முழுவதையும் சுத்தமாக வடித்துவிடவும். அரிசியில் தண்ணீர் துளியும் இருக்க வேண்டாம். பிறகு அரிசியை மிக்ஸியில் போட்டு அதனுடன் ஏலக்காயையும் போட்டு ஈர மாவாக இடித்துக்கொள்ளவும். சமயங்களில் கடைசியில் ஏலக்காயை சேர்க்க மறந்துவிடுவதால் இந்த ஐடியா. புட்டு, இடியாப்பம் என எல்லாவற்றுக்கும் இப்படியே இடித்துக்கொள்கிறேன்.

Step 2.
மாவை ஒரு எவர்சில்வர் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் கொட்டி, அதனுடன் சர்க்கரையையும், உப்பையும் போட்டு கை விடாமல் ஒரு கரண்டியால் நன்றாகக் கலந்து மூடி வைக்கவும். அடுத்த நாள் மாவை கையால் நன்றாகக் கிளறிவிட்டு பிசையவும். அதிரசம் செய்யும் பதத்திற்கு மாவு வந்துவிடும்.

Step 3.
ஈர மாவுடன் சர்க்கரை சேர்ந்து சிறிது நீர் விட்டுக்கொண்டு பதமாக இருக்கும். அப்படி ஈரம் பத்தவில்லை எனில் அரை ஸ்பூன் அளவிற்கு சுடுதண்ணீர் தெளித்து பிசையவும். டபக்கென நீறை ஊற்றிவிட வேண்டாம். பார்த்து தேவையானால் மட்டுமே சேர்க்கவும். அதிரச மாவு தயார். மாவினை சிறிது சிறிதாக உருட்டி தட்டவும். அதனை எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும். சுவையான சர்க்கரை அதிரசம் தயார்.


No comments:

Post a Comment

Adbox