தேங்காய் பர்பி



தேவையானவை
  •  தேங்காய் - 1 பெரியது
  •  சர்க்கரை – 2 கப்
  •  நெய் - தேவையான அளவு
  •  ஏலக்காய், முந்திரி – தேவையான அளவு


செய்முறை :

Step 1.
முதலில் தேங்காயை உடைத்து நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் கனமான பத்திரத்தில் சர்க்கரையை போடவும். இதில் சர்க்கரையில் தேவையான தண்ணீர் ஊற்றவும். சர்க்கரை கரையும் வரை கிளறவும்.

Step 2.
சர்க்கரை கரைந்த பின் துருவிய தேங்காயை போட்டு கிளறிக் கொண்டே இருக்கவேண்டும். இதன் இடையில் ஒரு தட்டில் சிறிது நெய் தடவி அருகில் வைத்து கொள்ளவும்.

Step 3.
கிளறிக் கொண்டே இருக்க வேண்டும், அடி பிடிப்பது போல் இருந்தால் சிறிது நெய் விட்டு கிளறவும். தண்ணீர் சுண்டி பாத்திரத்தில் ஒட்டாமல் லேசாக பொங்கி வருவது போல் இருக்கும் போது அடுப்பை அணைத்து விட்டு நெய் தடவி வைத்துள்ள தட்டில் பரவலாக கொட்டவும்.

Step 4.
ஒரு கத்தியில் லேசாக நெய் தடவி தேங்காய் பர்பியை சிறிய துண்டுகளாக வெட்டவும். பிறகு ஆற விடவும். சுவையான தேங்காய் பர்பி தயார்.



No comments:

Post a Comment

Adbox