ஸ்வீட் டைமண்ட் கட்ஸ்


தேவையானவை
  •  மைதாமாவு – 2 கப்
  •  சர்க்கரை – அரை கப்
  •  ஏலக்காய் – 2
  •  நெய் – 2 டீஸ்பூன்
  •  உப்பு – அரை டீஸ்பூன்
  •  தண்ணீர் – தேவையான அளவு
  •  எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு


செய்முறை :

Step 1.
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு, மாவு, உப்பு சேர்த்து மணல் மணலாக இருக்குமாறு பிசறிக்கொண்டு, அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மாவு மிருதுவாக இருக்க வேண்டும். மூடி போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும். சர்க்கரை மற்றும் ஏலக்காயை மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும். ஊறிய மாவை மீண்டும் பிசைந்து சப்பாத்தி போல தேய்க்கவும்.

Step 2.
மாவை டைமண்ட் வடிவங்களாக துண்டுகள் போடவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், தீயை மிதமாக்கி டைமண்ட் வடிவங்களை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சர்க்கரை மற்றும் ஏலக்காயை பொரித்தவற்றின் மீது தூவி விடவும். பிறகு டிஷ்யூ பேப்பரில் வைத்திருந்து சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும்.

No comments:

Post a Comment

Adbox