தேவையானவை
- அரிசி மாவு – 1 கப்
- ஓட்ஸ் – கால் கப்
- பொட்டுக்கடலை – கால் கப்
- வெண்ணெய் – 2 டீஸ்பூன்
- காய்ச்சிய சூடான எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
- சீரகம் – 2 சிட்டிகை
- எள் – 2 சிட்டிகை
- எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை :
Step 1.
முதலில் ஓட்ஸை வெறும் வாணலியில் சிறிது நேரம் வறுத்து அடுப்பை அணைக்கவும். சூடு ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு மாவாக்கிக் கொள்ளவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து மாவாக்கிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில், ஓட்ஸ் மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, வெண்ணெய், பெருங்காயத்தூள், எள், சீரகம் ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறவும்.
Step 2.
காய்ச்சிய சூடான எண்ணெய் சேர்த்துக் கிளறி, தேவையான தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாகப் பிசையவும். மாவை 3 கண் ஓட்டை உள்ள தேன்குழல் அச்சில் சேர்த்து, வாணலியில் எண்ணெயைச் சூடேற்றி, அதில் பிழிந்து வேக விடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.


No comments:
Post a Comment