சீயம்


தேவையானவை
  •  பச்சரிசி - 1 கப்
  •  உளுந்து - 1 கப்
  •  உப்பு - 1 கப்
  •  வெல்லம் - கால் கிலோ.
  •  பெரிய தேங்காய் - 1.
  •  ஏலக்காய் - 5 (பொடித்தது)
  •  எண்ணை - தேவையான அளவு.
  •  நெய் - 4 டீஸ்பூன்.


செய்முறை : 

Step 1.
முதலில் பூரணம் செய்ய தேங்காயை பூப் போல துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் வெல்லத்தைப் பொடித்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து, அதில் 2 ஸ்பூன் நெய் ஊற்றவும். அதில் துருவிய தேங்காயைப் போட்டு, ஈரச் சத்து போகும் வரை கிளறவும்.

Step 2.
அத்துடன், பொடித்த வெல்லத்தைப் போட்டுக் கிளறி, ஏலக்காய்த் தூளை சேர்த்து, உருண்டு வரும் போது கிளறி இறக்கி ஆற வைக்கவும். இதை முதல் நாளே செய்து வைத்துக் கொள்ளலாம். மாவிற்கு - பச்சரிசியையும், உளுந்தையும் ஒன்றாகக் களைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

Step 3.
நன்றாக ஊறியதும் அதை மிக்சியில் நைசாக வரும் வரை அரைக்கவும். பின்னர் கரைத்த மாவில், துளி உப்புச் சேர்த்துக் கலக்கவும். சேர்த்த பூரணத்தை சிறு எலுமிச்சம் பழ அளவு உருட்டி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி, எண்ணை காய்ந்ததும், உருட்டி வைத்ததை மாவில் தோய்த்து எடுத்து எண்ணையில் போட்டுப் பொரிக்கவும். சுவையான சீயம் தயார்.

No comments:

Post a Comment

Adbox