பச்சரிசி அதிரசம்



தேவையானவை
  •  பச்சரிசி - 2½ கப் (அ) 500 கிராம்
  •  கறுப்பு வெல்லம் -300 கிராம்
  •  ஏலக்காய் பொடி -1 டீஸ்பூன்
  •  எள் - 1 டீஸ்பூன்
  •  எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை :

Step 1.
முதலில் அரிசியை 1 – 1½ மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை நன்கு வடித்து விடவும்.

Step 2.
பின் அரிசியை உலர்ந்த துணியில், நிழலில் காய வைக்கவும். முக்கால் பாகம் காய்ந்தவுடன் மிசினில் இடித்துக் கொள்ளவும்.

Step 3.
இடித்து, சலித்துக் கொள்ளவும். வெல்லத்தை கனமான பாத்திரத்தில் ¼ கப் தண்ணீர் விட்டு காய்ச்சவும். வெல்லம் முழுவதும் கரைந்ததும்,

Step 4.
அதனை வடிகட்டி மீண்டும் கம்பிபதம் வரும் வரை மெல்லிய தீயில் காய்ச்சவும். ஏலக்காய் பொடி, எள் ஆகியவற்றை வெல்லபாகில் சேர்க்கவும்.

Step 5.
பின் சிறிது சிறிதாக வெல்லப் பாகை அரிசிமாவில் சேர்த்து கட்டி விழாதவாறு கிளறவும். அதிரசமாவானது சப்பாத்தி பதத்திற்கு வரும்.

Step 6.
அடிகனமான பாத்திரத்தில் எண்ணெயை காய வைத்து அதிரசமாவை வடை மாதிரி தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான பச்சரிசி அதிரசம் தயார்.

No comments:

Post a Comment

Adbox