தேவையானவை
- மாவு தயாரிக்க:
- மைதா – ஒரு கப்
- நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
- உப்பு – ஒரு சிட்டிகை
- ஆப்ப சோடா – ஒரு சிட்டிகை
- தண்ணீர்- தேவையான அளவு
- பூரணம் தயாரிக்க:
- கோவா (சர்க்கரை இல்லாதது) – அரை கப்
- சர்க்கரை (பொடித்தது) – கால் கப்
- முந்திரிப் பருப்பு – 5
- பிஸ்தா பருப்பு – 10
- பாதாம் பருப்பு – 5
- ஏலக்காய்ப் பொடி – கால் டீஸ்பூன்
- பாகு தயாரிக்க:
- சர்க்கரை – ஒரு கப்
- தண்ணீர் – கால் கப்
செய்முறை :
Step 1.
முதலில் சந்திரகலா ஸ்வீட்டுக்கு செய்த அதே முறைதான் இதற்கும். ஆனால் பூரணத்தை வட்டமாகத் தேய்த்த மாவின் உள்ளே வைத்து உள்பக்க ஓரங்களை தண்ணீரால் தொட்டு தடவவும். இனி, மற்றொரு வட்டமாகத் தேய்த்த சப்பாத்தியை எடுத்து பூரணத்தின் மேலே வைத்து ஒட்டவும்.
Step 2.
ஓரங்களை எல்லாம் உள்பக்கமாக மடித்துவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தயாராக வைத்திருக்கும் சூரியகலாவை எண்ணெயில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். மற்றொரு வாணலியில் சர்க்கரை மற்றும் தண்ணீரைக் கலந்து, அடுப்பில் வைத்து ஒரு கம்பி பதத்துக்கு பாகு வந்ததும் அடுப்பை அணைக்கவும். பாகு சூடு ஆறியதும், பொரித்தெடுத்த சூரியகலாவை அதில் சேர்த்து 10 நிமிடம் ஊறவைத்த பிறகு பரிமாறவும்.


No comments:
Post a Comment