தேவையானவை
- திராட்சை, செர்ரி, பைனாப்பிள், பேரீச்சம்பழம், முந்திரி, பாதாம் துண்டுகள் சேர்த்து - ஒரு கப்
- மில்க்மெய்ட் - அரை டின்
- மைதா மாவு, சர்க்கரை - தலா ஒரு கப்
- நெய் - முக்கால் கப்
- கலர் - கால் டீஸ்பூன்.
செய்முறை :
Step 1.
முதலில் அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து சூடானதும் அதில் மில்க்மெய்டை விட்டு, பழத் துண்டுகளைப் போட்டுக் கிளறவும். மற்றொரு பாத்திரத்தில் மைதாவை அரை கப் பாலில் கரைத்து, பழக் கலவையுடன் கலந்து கலர் சேர்த்துக் கிளறவும்.
Step 2.
சர்க்கரை சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறியதும் நெய்யை விட்டுக் கிளறி, நெய் மேலே பிரிந்து வரும்போது இறக்கி, தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். பிறகு விருப்பப்பட்டால் கால் டீஸ்பூன் ஃப்ரூட் எசென்ஸ் சேர்க்கலாம்.


No comments:
Post a Comment