தேவையானவை
- உளுந்து – ஒரு கப்,
- அரிசி – அரை கப்,
- எண்ணெய் – தேவையான அளவு,
- வெல்லம் –ஒரு கப்.
செய்முறை :
Step 1.
முதலில் உளுந்து, அரிசி இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைத்து சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும். அரைத்த மாவை முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து ஆற விடவும்.
Step 2.
வெல்லத்தைப் பொடித்து, சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். அதை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து பாகு உருட்டும் பதத்தில் காய்ச்சவும். அதை பொரித்து வைத்துள்ள முறுக்குகளின் மேல் ஊற்றிக் கிளறவும். சுவையான இனிப்பு முறுக்கு தயார்.


No comments:
Post a Comment