தேவையானவை
- பால் - 1 லிட்டர்,
- மைதா மாவு - அரை கப்,
- சர்க்கரை - 1 கப்,
- சீவிய முந்திரி, பாதாம் - 1 டேபிள் ஸ்பூன்,
- நெய் - 2 டேபிள் ஸ்பூன்,
- ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
- குங்குமப்பூ - சிறிதளவு,
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
Step 1.
முதலில் மைதா மாவுடன், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துப் பிசறி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு பிசையுங்கள். பிசைந்த மாவை சற்று கனமான சப்பாத்திகளாகத் தேய்த்துக் கொள்ளுங்கள். அதை டைமன் வடிவத்தில் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
Step 2.
மீதமுள்ள நெய்யுடன் எண்ணெய் சேர்த்து, கடாயில் காயவையுங்கள். நறுக்கி வைத்துள்ள மைதா துண்டுகளை அதில் போட்டுப் பொரித்தெடுங்கள் (நிறம் மாறாமல்). பூரி பொரிப்பதுபோல் பொரிக்கவேண்டும்.) அடுத்து, கனமான பாத்திரத்தில் பாலை வைத்து, பாதியாக வற்றும்வரை கொதிக்கவிடுங்கள். படியும் ஏடை பாத்திரத்தின் ஓரமாக ஒதுக்கிவிட்டுக்கொண்டே வாருங்கள்.
Step 3.
பாதியாக வற்றியவுடன் சர்க்கரை சேர்த்து, மேலும் ஐந்து நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு அடுப்பை அணையுங்கள். பிறகு, அந்தப் பால் கலவையில், சீவிய பாதாம், முந்திரி, ஏலக்காய்த்தூள், சிறிதளவு சூடான பாலில் கரைத்த குங்குமப்பூ, பொரித்து வைத்துள்ள துண்டுகள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பதினைந்து நிமிடம் ஊறவிட்டுப் பரிமாறுங்கள்.


No comments:
Post a Comment