தேவையானவை
- பாதாம் பருப்பு - 100 கிராம்,
- பால் - 100 மில்லி,
- சர்க்கரை - 150 கிராம்,
- பாதாம் எசன்ஸ் - சில துளிகள்,
- மஞ்சள் ஃபுட் கலர் - அரை சிட்டிகை,
- நெய் - 50 கிராம்
செய்முறை :
Step 1.
முதலில் பாலை கொதிக்கவிட்டு, ஆறவைக்கவும். பாதாம் பருப்பை 2 மணி நேரம் ஊறவிட்டு, தோல் நீக்கி, பாலுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
Step 2.
அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து பாதாம் - பால் விழுது, சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்து கரையவிடவும். அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி, கலவை ஒட்டாத பத்தில் வரும்போது பாதாம் எசன்ஸ் சேர்த்து இறக்கவும்


No comments:
Post a Comment