தேவையானவை
- மைதா மாவு - 2 கப்,
- அரிசி மாவு - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
- சர்க்கரை - 3 கப்,
- பேகிங் பவுடர் - கால் டீஸ்பூன்,
- தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
- மஞ்சள் ஃபுட் கலர் - ஒரு டீஸ்பூன்,
- எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
Step 1.
முதலில் மைதா மாவுடன், அரிசி மாவு, மஞ்சள் ஃபுட் கலர், பேகிங் பவுடர், தயிர் சேர்த்து வடை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதை 2 மணி நேரம் புளிக்கவிட்டு, ஜாங்கிரி பிழியும் துணியில் மாவைப் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து, பொரித்தெடுக்கவும். சர்க்கரையை கம்பிப் பாகு பதத்தில் காய்ச்சி, அதில் ஜிலேபிகளைப் போட்டு எடுக்கவும். சுவையான ஜிலேபி தயார்.


No comments:
Post a Comment