ரவா லட்டு


தேவையானவை
 ரவை – ½ கிலோ
 சர்க்கரை – ½ கிலோ
 பால் – 250 மில்லி லிட்டர்
 தேங்காய் – 1
 ஏலக்காய் – 12
 நெய் – 6 ஸ்பூன்
 முந்திரி பருப்பு – 50 கிராம்

செய்முறை :

Step 1.
முதலில் முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக உடைத்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

Step 2.
ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். பின் பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். வாணலியில் நான்கு ஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுக்கவும். ஐந்து நிமிடங்களில் ரவை வறுபட்டு மணம் வரும்.

Step 3.
வாணலியின் அடிப்பகுதியில் ஒட்டியுள்ள ரவை சிவக்க ஆரம்பித்ததும் தீயை சிம்மில் வைக்கவும். அடுத்ததாக சர்க்கரையை அதனோடு சேர்த்துக் கிண்டவும்

Step 4.
. தொடர்ந்து சிம்மில் வைத்தே செய்யவும். ஓரளவு சர்க்கரையின் அளவு சிறுத்து ரவையோடு சேர்ந்து வரும்போது தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிண்டவும். ஓரளவிற்கு விடாமல் கிண்டவும். இல்லை எனில் அடியில் தீய்ந்து ஒட்டிக் கொள்ளும்.

Step 5.
அப்பொழுது ஏலக்காய்த்தூளைச் சேர்த்து ஒன்றாக கலந்து வரும்படி கிளறவும். கடைசியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அதனோடு வறுத்த முந்திரி பருப்பைச் சேர்க்கவும்.

Step 6.
சூடான ரவைக் கலவையில் மிதமான சூட்டில் உள்ள பாலை ஊற்றி ஒரு பகுதியை மட்டும் நன்கு கலந்து விட்டு லட்டு பிடிக்கத் துவங்கலாம்.

Step 7.
ரவைக் கலவை ஆறிவிட்டால் மறுபடியும் பாலை சூடுபடுத்தி ரவைக் கலவையில் ஊற்றி மீதமுள்ள லட்டைப் பிடிக்கவும். சுவையான ரவா லட்டு தயார்.

No comments:

Post a Comment

Adbox