தேவையானவை
- புழுங்கலரிசி – 4 கப்,
- பொட்டுக்கடலை மாவு – ஒரு கப்,
- சீரகம் – அரை டீஸ்பூன்,
- எள் – 2 டீஸ்பூன்,
- வெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்,
- மிளகு – அரை டீஸ்பூன்,
- ஊறவைத்த பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடி
- உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
Step 1.
முதலில் புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். அதில் பொட்டுக்கடலை மாவு, சீரகம், மிளகுத்தூள், எள், ஊற வைத்த பாசிப்பருப்பு, வெண்ணெய், உப்பு சேர்த்து பிசையவும். வெள்ளை துணியின் மீது ஒரு டம்ளரை கவிழ்த்து, பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிது எடுத்து, டம்ளரை சுற்றி கையினால் முறுக்கு சுற்ற வேண்டும். சுற்றிய முறுக்குகள் ஈரம் காய்ந்ததும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சீரகம், மிளகுத்தூளுக்கு பதிலாக மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம்.


No comments:
Post a Comment