தேவையானவை
- அரிசி மாவு – 1 கப்
- கடலை மாவு – 1 /4 கப்
- எள்ளு – 1 /2 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1 -2 தேக்கரண்டி
- எள்ளு – 1 /2 தேக்கரண்டி
- பெருங்காயம் – 1 /2 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – பொரிக்க
செய்முறை :
Step 1.
முதலில் கனமான பாத்திரத்தில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ளவும். பின்னர் அரிசி மாவு, கடலை மாவு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதனுடன் வெண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
Step 2.
இதனுடன் எள்ளு மற்றும் தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும். முறுக்கு அச்சில் உள்ள ரிப்பன் பக்கோடா அச்சைப் பயன்படுத்தி எண்ணெயில் பாத்திரம் பிடிக்கும் அளவுக்கு பிழிந்து விடவும். பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். சுவையான ரிப்பன் பக்கோடா தயார்.


No comments:
Post a Comment