தேவையானவை
- கடலை மாவு : 250 கிராம்
- நெய் : சிறிதளவு
- கேசரிபவுடர் : சிறிதளவு
- சீனி : ½ கிலோ
- ரீபைண்ட் ஆயில் தேவையான அளவு
செய்முறை :
Step 1.
முதலில் சீனியை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ளவும். கடலை மாவை தண்ணீர் சேர்த்து தோசைமாவு போல் கரைத்துக் கொள்ளவும்.
Step 2.
வாணலியில் எண்ணெய் காய வைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி தேய்த்து எண்ணெயில் போடவும். எண்ணெயில் விழுந்த மாவு அதிகம் சிவக்காமல் வெந்ததும் எடுத்து சீனிப்பாகில் போட்டு சிறிது நேரத்தில் எடுத்து ஒரு பாயில் போடவும். சுவையான பூந்தி தயார்.


No comments:
Post a Comment