மைசூர் பாக்



தேவையானவை
  •  கடலை மாவு - 250 கிராம்
  •  டால்டா (அ) நெய் - 750 கிராம்
  •  சீனி - 750 கிராம்
  •  சோடா உப்பு - 1 சிட்டிகை


செய்முறை :

Step 1.
முதலில் கனமான பாத்திரத்தில் சீனியை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி கம்பி பதம் வந்தவுடன் கடலைமாவை ஒரு கையால் தூவிக் கொண்டே கட்டி சேராமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

Step 2.
மற்றொரு அடுப்பில் நெய்யை இளக வைத்து இடையிடையே கலவையில் ஊற்றி கைவிடாமல் கிளறவும். நெய் கக்கி பொங்கி வரும்போது சிறிது சோடா உப்பு போட்டு கிளறி நெய் தடவிய தாம்பளத்தில் கொட்டி கரண்டியால் தேய்த்து விட்டால் மைசூர் பாகு ரெடியாகி விடும்.

Step 3.
ஆறுவதற்கு முன் சதுர கோடுகள் போடவும். ஆரிய பின் சுவையான மைசூர் பாக் தயார்.


No comments:

Post a Comment

Adbox