ரஸமலாய்



தேவையானவை

  •  பால் - 2 லிட்டர்,
  •  சர்க்கரை - 2 கப்,
  •  தண்ணீர் - இரண்டரை கப்,
  •  குங்குமப்பூ - 1 சிட்டிகை,
  •  சீவிய பிஸ்தா + பாதாம் - 1 டேபிள் ஸ்பூன்,
  •  ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்,
  •  வினிகர் - 2 டீஸ்பூன்,
  •  மைதா - 1 டீஸ்பூன்


செய்முறை :

Step 1.
முதலில் ஒரு லிட்டர் பாலை அடுப்பில் வைத்துக் காய்ச்சுங்கள். அதனுடன் அரை கப் சர்க்கரையைச் சேர்த்து, பால் பாதியளவு ஆகும்வரை கொதிக்க விடுங்கள். பிறகு, அதனை அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய்த் தூள், சூடான பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து நன்கு கலந்து வையுங்கள். மீதமுள்ள ஒரு லிட்டர் பாலிலிருந்து பனீர் செய்து (செய்முறைக்கு பார்க்க. 93-ம் பக்கம்) கொள்ளுங்கள்.

Step 2.
அதை ஒரு தட்டில் கொட்டிக்கொண்டு, மைதா சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். பிறகு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள். குக்கரில் இரண்டரை கப் தண்ணீரையும் மீதமுள்ள சர்க்கரையையும் சேருங்கள். குக்கரை அடுப்பில் வைத்து சர்க்கரை கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போடுங்கள். பின்னர் குக்கரை மூடி, இரண்டு விசில் வந்ததும் இறக்குங்கள்.

Step 3.
குக்கர் வெயிட்டை லேசாகத் தூக்கி, பிரஷரை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுங்கள். பின்னர், வெந்திருக்கும் உருண்டை களை எடுத்து, உள்ளங்கையில் வைத்து, லேசாக அழுத்திப் பிழிந்து, காய்ச்சி வைத்துள்ள பாலில் போடுங்கள். நன்கு ஊறியவுடன் பரிமாறுங்கள்.

No comments:

Post a Comment

Adbox