காராபூந்தி



தேவையானவை
  •  கடலை மாவு - 200 கிராம்,
  •  சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
  •  வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்,
  •  அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
  •  மிளகாய்த்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு,
  •  உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை : 

Step 1.
முதலில் கடலை மாவு, உப்பு, அரிசி மாவை ஒன்றுசேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூந்தி கரண்டியில் மாவை விட்டு, எண்ணெயில் விழும்படி தேய்த்து சிவக்க பொரித்துக் கொள்ளவும்.

Step 2.
இத்துடன் பொரித்த வேர்க்கடலை, மிள காய்த்தூள் சேர்க்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து நன்கு கசக்கி இந்தக் கலவையுடன் சேர்ந்து நன்றாக குலுக்கிவிட்டால், சுவையான காராபூந்தி தயார்.

No comments:

Post a Comment

Adbox