தேவையானவை
- பால் - 1 லிட்டர்,
- புட்டரிசி - அரை கப்,
- தேங்காய்ப்பால் - 1 கப்,
- சர்க்கரை - ஒண்ணேகால் கப்,
- ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
செய்முறை :
Step 1.
முதலில் புட்டரிசியை இரண்டு முறை கழுவி, தண்ணீரை வடித்துவிட்டு, மிக்ஸியில் ரவை போல உடைத்துக் கொள்ளவும் (அரிசி ஈரமாக இருப்பதால், அது ஒரே அளவில் ரவை போல உடையும்).
Step 2.
ஒரு கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதனுடன் இரண்டு கப் தண்ணீர், உடைத்து வைத்திருக்கும் அரிசியைச் சேர்த்து, நடுத்தரத் தீயில் வைத்துக் கிளறுங்கள். அரிசி ரவை நன்கு பஞ்சு போல வெந்தவுடன், சர்க்கரை சேர்த்து, மேலும் பத்து நிமிடம் கொதிக்கவிடுங்கள். அடுப்பை அணைத்துவிட்டு, தேங்காய்ப் பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறுங்கள்.


No comments:
Post a Comment