தட்டை



தேவையானவை
  •  அரிசிமாவு – 4 கப்
  •  கடலைபருப்பு – 2 மேசைக்கரண்டி
  •  கருவேப்பிலை – 2 – 3 கொத்து
  •  உளுந்துமாவு – 1 /2 கப்
  •  பொட்டுகடலை மாவு – 1 /2 கப்
  •  நெய் – 4 மேசைக்கரண்டி
  •  மிளகாய்த்தூள் – 1 – 2 மேசைக்கரண்டி
  •  பெருங்காயத்தூள் – 1 /2 தேக்கரண்டி
  •  பச்சை மிளகாய் – 5
  •  எண்ணெய் – பொரிப்பதற்கு
  •  உப்பு – தேவையான அளவு


செய்முறை : 

Step 1.
முதலில் பச்சை மிளகாய், கருவேப்பிலை இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். எண்ணெய் தவிர மீதமுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதனுடன் 2 தேக்கரண்டி பொட்டுக்கடலை, 1 தேக்கரண்டி எள் சேர்த்துக் கொள்ளவும்.

Step 2.
சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு பாலிதீன் பேப்பர் எடுத்து மேலே நெய் தடவிக் கொள்ளவும். ஒரு உருண்டை எடுத்து பேப்பர் மேலே வைத்து, மெல்லியதாக வட்ட வடிவில் தட்டிக் கொள்ளவும். போர்க் வைத்து இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக அழுத்திக் கொள்ளவும். தட்டி வைத்திருக்கும் தட்டையை , சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

No comments:

Post a Comment

Adbox